டெல்லி
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து குறித்த கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஈபிஎஸ் உடன் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர்.
டெல்லியில் முக்கியமானவர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது சிரித்த முகத்துடன் பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் நன்மைக்கே என பதில் அளித்தார்.