முதல்வர் பதவிக்காக காலில் விழுந்து ஒருவரை ஏமாற்றினரே, அந்த அம்மையார்தான் தியாகி; நொந்து நூடுஸ்லாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் !! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

சென்னை:
அந்த தியாகி யார்? என்ற அதிமுக எம்.எல்.ஏக்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்கள் போக்குவரத்து உரிமங்கள் வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

டாஸ்மாக்ஊழல் பின்னணியில் உள்ள #அந்ததியாகி_யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், அந்த தியாகி யார்? என்ற அதிமுக எம்.எல்.ஏக்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நொந்து நூடுஸ்லாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி. முதல்வர் பதவிக்காக காலில் விழுந்து ஒருவரை ஏமாற்றினரே, அந்த அம்மையார்தான் தியாகி அதிமுகவினர் தாம் சிக்கியுள்ள பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்கவே காலில் விழுந்துள்ளனர்”

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *