சென்னை;
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கூறியதாவது:
- பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது.
- இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் பேசிய திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.