மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். 2000-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கங்குலி தலைமையின் கீழ் அறிமுகமான ஜாகீர் கான், 2014-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.
இவர் இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.
2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஜாகீர் கான்.
இவர் நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்த குழந்தைக்கு ஃபடேசின் கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.