சென்னை:
நடிகை குஷ்பு சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சனைகளால் சிரமப்பட்டு வந்தார். முழங்காலில் அவருக்கு அறுவைசிகிச்சைகளும் செய்யப்பட்டன. இந்த சூழலில் எடையை குறைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவருடைய உடல்நலக் காரணங்கள் ஒருபுறம் இருக்க, ஓராண்டில் கிட்டத்தட்ட 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார் குஷ்பு.
குஷ்புவின் எடை குறைப்பு பின்னணி;
நாள்தோறும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வாராம். அதைப் போலவே மாலையிலும் சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறார்.
ஒருவேளை நடைபயிற்சி செய்யமுடியாவிட்டால் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் கடைபிடித்து வந்திருக்கிறார்.
நாம் எந்த விஷயத்தை செய்ய தொடங்கினாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு சில நாட்கள் செய்துவிட்டு முயற்சியைக் கைவிடக்கூடாது. குஷ்பு எடையை குறைத்ததற்கு அவருடைய ஓராண்டு முயற்சி தான் காரணம் என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.