குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு முடக்கம்!!

சென்னை:
சினிமா நடிகையும் பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.

நடிகை குஷ்பு எக்ஸ் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருபவர். அவரது அரசியல் சார்ந்த பதிவுகள் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கும்.

இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் தள கணக்கில் மின்னஞ்சல் முகவரி தற்போது மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகர்கள் சமூக வலைதளத்தில் மும்முரமாக செயல்படுவது வழக்கம். அந்த வகையில் குஷ்புவும் எக்ஸ் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர்.

தான் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அவரது பதிவுகள் இருக்கும். இந்த நிலையில்தான் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *