பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்ற அணி இரண்டாவது இடத்தை பிடித்து !!

சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகான அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் முழுக்க கவனம் செலுத்தி வருகிறார்.

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களை நடிப்பதற்காகவும், எஞ்சிய மாதங்களில் முழுக்க கார் பந்தயத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை மூலம் அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தான் திட்டமிட்ட மாதங்களில் குட் பேட் அக்லி படத்தை நடித்து முடித்தார். பின்னணி வேலைகள் முடிந்து, சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

விடாமுயற்சியில் ஏமாற்றமடைந்த அஜித் ரசிகர்கள், குட் பேட் அக்லி படத்தைக் கொண்டாடினர்.

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்ற அணி இரண்டாவது இடத்தை பிடித்து அசதியுள்ளது.

இதுகுறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ வலைத்தள பதிவில், ‘இந்திய மோட்டார் ஸ்போர்ட்டிற்கு ஒரு பெருமையான தருணம்! பெல்ஜியத்தில் உள்ள மதிப்புமிக்க ஸ்பா ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் குறிப்பிடத்தக்க P2 போடியம் ஃபினிஷிங்கைப் பெற்றனர்.

உலகளாவிய பந்தய மேடையில் ஆர்வம், துல்லியம் மற்றும் விடாமுயற்சிக்கு இது ஒரு சான்று’ என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *