கோவை ;
தவெக தலைவர் விஜய்யை வரவேற்க காலை முதலே கோவை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கம், கோவையில் இன்று தொடங்குகிறது.
2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் த.வெ.க தலைவர் விஜய், இன்று கோவையில் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு கோவை செல்லும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். விமான நிலையம் முதல் விஜய் தங்க உள்ள ஹோட்டல் வரைக்கும் வரவேற்பு அளிக்க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சக்தி சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்க கூட்டத்தில், மதியம் 2 மணிக்கு விஜய் கலந்து கொள்கிறார்.தனி விமானம் மூலம் கோவைக்கு காலை 11.10 மணிக்கு செல்லும் விஜய், அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார்.
இதனிடையே தவெக தலைவர் விஜய்யை வரவேற்க காலை முதலே விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.