சென்னை:
அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனிடையே பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் அஜித்குமார் பத்மபூஷன் விருதை பெறுகிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இவ்விருதை வழங்கவுள்ளார்.
மத்திய அரசின் உயரிய விருதகளில் பத்மபூஷன் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.