திருச்சி
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய ஏசி பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில் ஏசி வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.408 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை முதல்வர் திறந்து வைத்தார். மேலும் ரூ.236 கோடியில் அமைக்கப்பட உள்ள காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைவர்களுக்கு சிலை அமைக்க வேண்டியது நமது கடமை மட்டுமல்ல, சிறு நன்றிக்கடன். திருச்சியில் காமராஜர் பெயரில் பிரமாண்ட நூலகம் உருவாகி வருகிறது.
பெரியார் பிறந்தது ஈரோடு என்றாலும் அவர் மாளிகை கட்டி வாழ்ந்தது திருச்சி. திருச்சிக்கும் திராவிட தலை மகன்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது என கூறினார்.