முரளி நாயக்கின் தியாகத்தை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது – பவன் கல்யாண்!!

அமராவதி,
ஆந்திராவின் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.


ஆபரேஷன் சிந்தூரில்’ வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் (ஜவான்) முரளி நாயக்கின் தியாகத்தை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது, ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த முரளி நாயக்கின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சுல்லி தண்டாவைச் சேர்ந்த இந்த இளம் ஜவான், நாட்டின் பாதுகாப்புக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு போர்க்களத்தில் தியாகியானார்.


இந்த மாவிரனின் பெற்றோரான ஜோதி பாய். ஸ்ரீராம் நாயக் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திர மாநில அரசு குடும்பத்திற்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் என தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *