தேமு​தி​கவைப் பொறுத்​தவரை கூட்​டணி ஆட்​சியை வரவேற்​கிறோம் – பிரேமலதா….

கிருஷ்ணகிரி:
மா விவ​சா​யிகளுக்கு நிவாரணம் வழங்​கக் கோரி கிருஷ்ணகிரி​யில் தேமு​திக சார்​பில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கேற்ற, அக்​கட்​சி​யின்பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

அதி​முக​வுக்கு தனிப்​பெரும்​பான்மை கிடைக்​கும் என அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறு​வதும், மத்​திய அமைச்​சர் அமித்ஷா தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமை​யும் என்று கூறு​வதும் அவர​வர் கருத்​து.

தேமு​தி​கவைப் பொறுத்​தவரை கூட்​டணி ஆட்​சியை வரவேற்​கிறோம். தேர்​தல் கூட்​டணி குறித்து ஜனவரி 9-ம் தேதி அறி​விப்​போம். பாஜக, தி​முகவை எதிர்க்​கும் கட்​சிகளை இணைத்து கூட்​டணி அமைக்​கப்​படுமா என்​பதை காலம்​தான் முடிவு செய்​யும்.

திருப்​புவனத்​தில் அஜித்​கு​மார் என்ற இளைஞர் போலீஸ் வி​சா​ரணை​யின்​போது உயி​ரிழந்​துள்​ளார். மாரடைப்​பால் அவர் உயி​ரிழந்​திருப்​ப​தாக முதல்​வர் ஸ்டா​லின் கூறு​வது வருத்​தமளிக்​கிறது.

காவல் துறை மக்​களுக்கு நன்மை செய்ய வேண்​டுமே தவிர, ஏவல் துறை​யாக இருக்​கக் கூடாது. இவ்​வாறு பிரேமல​தா கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *