ஈரோடு ,
வேளாண்மை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய உயிர் அறிவியல் துறைகளில் முக்கிய திறன்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமான பேயர், நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயிலிருந்து முளுப்பயிரையும் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான பூசனக் கொல்லியான ஃபெளுஜித்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ஜூலை மாதம் முதல் நாட்டின் முக்கிய நெல் சாகுபடி செய்யும் மாநிலங்களில் ஃபெளுஜிட் கிடைக்க தொடங்கும்.
பாயர் நிறுவத்தின் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையின் பயிர் அறிவியல் பிரிவின் கூட்டமைப்பு வணிக தலைவரான மோகன் பாபு கூறுகையில் வேளாண் துறை தற்போது பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் பென்ஃப்ளூபென் மற்றும் டெப்யூகோனாசோல் ஆகியவற்றின் தனித்துவமான கலவையுடன் உருவாக்கப்பட்ட ஃபெளுஜிட், மண்ணில் இருந்து பரவும் இந்த நோயை கட்டுப்படுத்தும் விவசாயிகளின் அணுகுமுறையை முழுமையாக மாற்ற உள்ளது.
இந்த தயாரிப்பு செடியின் முழு அமைப்பிலும் செயல்படும் இரட்டை செயல் முறை மூலம் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் மகசூல் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்தும் நம்பகமான தீர்வை வழங்குகிறது. ஃபெளுஜிட்-இன் ஒரு முறை தெளிப்பதன் மூலமே சந்தையில் உள்ள தற்போதைய தயாரிப்புகளைவிட இரட்டிப்பான நேரம் வரை பலனளிக்கிறது.
இதனால் விவசாயிகள் குறைந்த அளவிலான தெளிப்புகளால் இந்த நோயை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிகிறது, மேலும் நேரமும், செலவுகளும் சேமிக்கப்படு கின்றன.ஃபெளுஜிட் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வாகும், இது அவர்களின் விவசாய நடைமுறைகளை நெறிப்படுத்துவதோடு, இலையுறை கருகல் நோயை சிறந்த முறையில் கட்டுப்படுத்துகிறது.
நெல் பயிரின் உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் உள்ள முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்த புதுமையான தயாரிப்பு குறைந்த தெளிப்புகளால் நோயை கட்டுப்படுத்துவதற்கான திறனை வழங்கி, விவசாயிகள் தங்களது வளங்களை சிறப்பாக நிர்வகித்து, வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது, என தெரிவித்தார்.
320 மில்லி மற்றும் 1 லிட்டர் வசதியான அளவுகளில் கிடைக்கும் ஃபெளுஜிட், இலையுறை கருகல் நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு அத்தியாவசிய கருவியாக மாறத் தயாராக உள்ளது.