கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இதனையடுத்து விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்களுக்கான விருந்து நிகழ்வில் நடனமாடிய ஜன்னிக் சின்னர் மற்றும் இகா ஸ்வியாடெக் இணைந்து நடனமாடினர். இது தொடர்பான புகைப்படங்களை விம்பிள்டன் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.