15-ந் தேதி (செவ்வாய்)
- சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
- குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.
- மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (புதன்)
- முகூர்த்த நாள்.
- திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- மேல்நோக்கு நாள்.
17-ந் தேதி (வியாழன்)
- சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
- சமநோக்கு நாள்.
18-ந் தேதி (வெள்ளி)
- திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
- ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
- சமநோக்கு நாள்.
19-ந் தேதி (சனி)
- மேல்மருவத்தூர், ராமேஸ்வரம், நயினார் கோவில், திருவானைக்காவல், காளையார் கோவில் முதலிய தலங்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
- திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் தலங்களில் விழா தொடக்கம்.
- கீழ்நோக்கு நாள்.
20-ந் தேதி (ஞாயிறு)
- கார்த்திகை விரதம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
- நயினார்கோவில் சவுந்திரவல்லி பல்லாங்குழி ஆடி வரும் காட்சி.
- திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் பவனி.
- கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (திங்கள்)
- சர்வ ஏகாதசி.
- திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
- திருத்தணி முருகப்பெருமான் தெப்ப உற்சவம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையில் பவனி.
- மேல்நோக்கு நாள்.