சென்னை;
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா, 40 வயதை நெருங்கினாலும் இன்றளவும் டாப் ஹீரோயினாக நீடித்து வருகிறார் நயன். தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
நடிகை நயன்தாரா தற்போது சசிகாந்த் இயக்கும் டெஸ்ட், யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கத்தில் உருவாகும் மண்ணாங்கட்டி மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி என எக்கச்சக்கமான படங்களை லைன் அப்பில் அடுக்கி வைத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி தன் கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் நயன், பல்வேறு தொழில்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.
நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன. கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா, அதில் தன் கணவர் மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் அவர் இன்ஸ்டாவில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்தது சர்ச்சையாக வெடித்தது.
இதனால் இருவருக்கும் இடையே சண்டையா என பேச்சு எழத் தொடங்கியது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், ‘நான் தோற்றுவிட்டேன்’ என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் விக்னேஷ் சிவனுடன் சண்டைபோட்டு இப்படி பதிவிட்டுள்ளாரா அல்லது இது ஏதேனும் விளம்பரத்திற்காக போடப்பட்ட பதிவா என்பது தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.