கூண்டோடு ஜென்ம வினைகளை ஒழிக்கும் திருவோண விரதம்!!

இன்று சந்திரனுக்குரிய திருவோண நாள். திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம். இது வியாழக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. சந்திரனும், குருவும் சேர்வது யோகம் என்று கருதப்படுகிறது. இந்த யோக நாளில் விரதம் இருந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் விரதம் இருந்து திருமாலை வழிபடுவது பூர்வ ஜென்ம வினைகளை கூண்டோடு ஒழிக்கும். தமிழகத்தில் பல வைணவத் தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாக உள்ளன.

கும்பகோணத்திற்கு அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் போன்ற சில தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாகும்.

இன்று எல்லா பெருமாள் கோவில்களிலும் திருவோண சிறப்பு வழிபாடுகளும் திருமஞ்சனமும் நடைபெறும். இன்று காலை திருவோண விரதத்தை தொடங்க வேண்டும்.

மாலையில் துளசி மாலையோடு சென்று அருகில் உள்ள பெருமாள் கோவிலில் விளக்கேற்றி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமியை வணங்கி பால் அல்லது பழம் நிவேதனம் செய்து விரதத்தை முடிக்கலாம்.

திருவோண விரதம் இருப்பதால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். நல்ல புத்திக்கூர்மை ஏற்படும். திருவோண விரதம் இருப்பதால் சந்திர தோஷம் விலகுவதுடன், சந்தோஷமான மணவாழ்வு அமையும்.

திருவோண விரதம் அன்று சொல்ல வேண்டிய பாசுரம்:

`நான்ஏதும் உன்மாய மொன்றறியேன்

நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த

ஊனேபுகே யென்று மோதும் போது

அங்கேதும் நான்உன்னை நினைக்க

மாட்டேன்

வானேய் வானவர் தங்களீசா!

மதுரைப் பிறந்த மாமாயனே! என்

ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும்

அரங்கத் தரவணைப் பள்ளியானே!’

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *