நாள்​தோறும் கட்சி நிர்​வாகி​கள் மக்​களை சந்​தித்​துக் கொண்டே இருக்க வேண்​டும் – திமுக மாவட்ட செயலாளர் களுக்கு ஸ்டாலின் அழைப்பு!!

சென்னை:
மீண்​டும் நாம் ஆட்​சி​யமைக்க களம் தயா​ராகி​விட்​ட​தால் நானும் ஓய்​வெடுக்க போவ​தில்​லை.; உங்​களை​யும் ஓய்​வெடுக்க அனு​ம​திப்​ப​தில்லை என்று திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம், சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலைமை அலு​வல​க​த்​தில் நேற்று நடந்​தது.

இந்த கூட்​டத்​தில் திமுக தலை​வரும், தமிழக முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: சட்​டப்​பேரவை தேர்​தலை எதிர்கொள்ளும் வகை​யில் தொகுதி பிரச்​சனை​களை களை​ய​வும், மக்​கள் குறை​களை தீர்க்​க​வும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின், ‘தா​யு​மானவர் திட்​டம்’ ஆகிய​வற்றை செயல்​படுத்தி வரு​கிறோம். நலத்​திட்​டங்​கள் மூலம் மக்​கள் மத்​தி​யில் நமது செல்​வாக்கு அதி​கரித்​துள்​ளது. நாள்​தோறும் கட்சி நிர்​வாகி​கள் மக்​களை சந்​தித்​துக் கொண்டே இருக்க வேண்​டும்.

தற்​போது பாஜக அரசு தேர்​தல் ஆணை​யம் மூலம் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் மூலம் என்​னென்ன அட்​டூழி​யங்​களை பிஹாரில் மேற்​கொண்டு வரு​கிறது என்​பதை கண்​கூ​டாக பார்க்​கிறோம்.

வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்க்​கும் பொருட்டு கடந்த ஆண்​டு​களில் துபாய், சிங்​கப்பூர், ஜப்​பான், ஸ்பெ​யின், அமெரிக்கா உள்​ளிட்ட நாடு​களுக்கு பயணம் மேற்​கொண்​டு, அங்​குள்ள முதலீட்​டாளர்​களு​டன் பேசி​யதன் விளை​வாக தமிழகத்​துக்கு ரூ.10 லட்​சம் கோடி அளவி​லான முதலீடு​கள் கொண்​டு​வரப்​பட்​டு, பல்வேறு பன்​னாட்டு நிறு​வனங்​கள் தங்​களது நிறு​வனங்​களை தொடங்கி உள்​ளன.

அதன் காரண​மாக சுமார் 30 லட்​சம் பேருக்கு நேரடி​யாக​வும், மறை​முக​மாக​வும் வேலை​வாய்ப்பு பெருகி உள்​ளது. மத்​திய அரசு வெளி​யிட்ட தகவல்​படி இந்​தி​யா​விலேயே பொருளா​தா​ரத்​தில் இரட்டை இலக்க வளர்ச்​சியை எட்​டிய ஒரே மாநிலம் தமிழகம்தான். வரும் செப்​டம்​பர் மாதம் ஜெர்​மனி, இங்​கிலாந்து நாடு​களுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு முதலீடு​களை ஈர்த்து வர உள்​ளேன்.

வரும் நாட்​களில் திமுக அரசு மேற்​கொள்​ளும் நடவடிக்​கைகளால், தமிழகத்​தின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடு​களுக்கு இணை​யாக உயரும் என்​பதை உறு​தி​யாக சொல்லி கொள்​கிறேன். நானும் ஓய்​வெடுக்க போவ​தில்​லை. உங்​களை​யும் ஓய்​வெடுக்க அனு​ம​திப்​ப​தில்​லை. மீண்​டும் நாம் ஆட்​சி​யமைக்க களம் தயா​ராகி​விட்​டது முழு வீச்​சுடன் பணி​யாற்​றிடு​வோம்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்​.

தீர்மானங்கள்: முன்னதாக நடைபெற்ற திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டத்தில், கட்​சி​யின் பொதுச்​செய​லா​ள​ரும், நீர்​வளம் மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சரு​மான துரை​முரு​கன், பொருளாள​ரும், மக்​களவை உறுப்​பினரு​மான டி.ஆர்​.​ பாலு, முதன்​மைச் செய​லா​ள​ரும், நகராட்சி நிர்​வாகத்​துறை அமைச்​சரு​மான கே.என்​.நேரு, துணை பொது செய​லா​ளர்​களான ஊரக வளர்ச்​சித்​துறை அமைச்​சர் இ.பெரிய​சாமி, எம்​.பி.க்​கள் திருச்சி சிவா, ஆ.ரா​சா, அந்​தி​யூர் செல்​வ​ராஜ், கனி​மொழி, அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ். பார​தி, செய்தி தொடர்பு தலை​வர் டி.கே.எஸ்​.இளங்​கோவன், இணை அமைப்பு செய​லா​ளர் அன்​பகம் கலை, துணை அமைப்பு செய​லா​ளர்​கள் ஆஸ்​டின், தாயகம் கவி, மற்​றும் மாவட்ட செய​லா​ளர்​கள் கலந்து கொண்​டனர்.

இந்த கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள் வரு​மாறு: தேர்​தல் நடை​முறைக்கு அடிப்​படை ஆவணமே வாக்​காளர் பட்​டியல்​தான் என்ற நிலை​யில், அந்த வாக்​காளர் பட்​டியலை துல்​லிய​மாக​வும், தவறுகள் இல்​லாமலும் தயாரிப்​பது சுதந்​திர​மான மற்​றும் நேர்​மை​யான தேர்​தலுக்கு மிக முக்​கிய​மானது.

தேர்​தல் ஜனநாயகத்தை சிதைக்​கும் பிஹார் சிறப்பு தீவிர திருத்​தத்​தினை எதிர்த்து திமுக உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் அனைத்​தும் கடுமை​யான எதிர்ப்​பினை பதிவு செய்த நிலை​யிலும், உச்ச நீதி​மன்​றமே எச்​சரித்த பிறகும் அம்​மாநிலத்​தில் 65 லட்​சம் வாக்​காளர்​களை, தன்​னிச்​சை​யாக தேர்​தல் ஆணை​யம் நீக்​கி​யிருப்​பது ஜனநாயக விரோத நடவடிக்​கை​யாகும்.

பாஜக அரசும் இந்​திய தலைமை தேர்​தல் ஆணை​ய​மும் தொடர்ந்து மேற்​கொள்​ளும் ஒரு சார்​பான நடவடிக்​கைகளுக்கு இந்த கூட்​டம் கடும் கண்​டனத்தை தெரி​வித்து கொள்​கிறது. தேர்​தலை நடத்​து​வது மட்​டுமல்ல, அதற்​கான வாக்​காளர் பட்​டியலை தயாரிப்​பதும் தன்​னாட்​சிபெற்ற அமைப்​பிடம் இருக்க வேண்​டும் என அரசி​யல் சட்​டத்​திலேயே தேர்​தல் ஆணை​யத்​துக்கு முழு பொறுப்​பும் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், தேர்​தல் ஆணை​யர்​களை நியமிக்​கும் தேர்வு குழு​விலிருந்து உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி நீக்​கப்​பட்​டபிறகு, தேர்​தல் நடத்​து​வ​தில் மட்​டுமல்ல, வாக்​காளர் பட்​டியலைத் தயாரிப்​ப​தி​லும் தேர்​தல் ஆணை​யம் அரசி​யல் சாயம் பூசி கொண்​டு, பாஜக அரசுடன் கைகோத்து நிற்​பது ஜனநாய கத்தை கேள்விக்​குரிய​தாக ஆக்​கு​வது கவலை​யளிக்​கிறது.

தமிழகம் உள்​ளிட்ட பிற மாநிலங்​களில் தேர்​தல் நடை​முறை​களை தொடங்​கும் முன்பே சுதந்​திர​மான மற்​றும் நேர்​மை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியலை சரி​பார்த்து உறு​திப்​படுத்​தும் பணியை தேர்​தல் ஆணை​யம் நிறைவேற்​றிட வேண்​டும். இவ்வாறு இந்த கூட்டத்தில் தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *