”நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி நான் அரசியலுக்கு வரவில்லை” – ரஜினி, கமலை விமர்சித்து பேசிய விஜய்!!

மதுரை;
மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் மிகவும் மாஸாக உரையாற்றினார் அதற்கு மக்கள் ஆரவாரம் செய்தனர். அப்பொழுது ஒரு குட்டி கதை ஒன்றை கூறினார். தனது வழக்கமான ஸ்டைலில் அவர் கூறிய கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

கொள்கை எதிரி , அரசியல் எதிரி என நேரடியாக திமு.க மற்றும் பா.ஜ.க வை விமர்சித்து பேசினார். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலன்கருதி அவரது ஆட்சி செயல்படும் என கூறினார். மேலும் ” நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை.

இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி நான் அரசியலுக்கு வரவில்லை. ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம் பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்” என கூறினார்.

இந்த வாக்கியம் அரசியலுக்கு வருவேன் என வராமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், மார்கெட் இல்லாமல் அடைக்களம் தேடி வந்தவர் என கூறியது நடிகர் கமல்ஹாசனை குறிப்பிட்டு பேசினாரா? என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *