சென்​னை, கோவை, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ரூ.10.89 கோடி மதிப்​பீட்​டில் நடை​பெறவுள்ள விளை​யாட்டு மேம்பாட்டு உட்​கட்​டமைப்பு பணி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அடிக்​கல் நாட்டினார்!!

சென்னை:
சென்​னை, கோவை, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ரூ.10.89 கோடி மதிப்​பீட்​டில் நடை​பெறவுள்ள விளை​யாட்டு மேம்பாட்டு உட்​கட்​டமைப்பு பணி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

சென்னை கோபாலபுரத்​தில் அமைந்​துள்ள கலைஞர் நூற்​றாண்டு குத்​துச்​சண்டை அகாடமி வளாகத்​தில் புதிய விளை​யாட்டு விடு​தி, கோவை மாவட்​டத்​தில் உள்ள நேரு விளை​யாட்டு வளாகத்​தில் பார்​வை​யாளர்​கள் மாடம் புதுப்​பிக்​கப்​படும் என நடப்​பாண்டு (2025-26) பட்​ஜெட் கூட்​டத்​ தொடரில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அறி​வித்​திருந்​தார்.

அதன்​படி கோபாலபுரம் கலைஞர் நூற்​றாண்டு குத்​துச்​சண்டை அகாடமி ரூ.3 கோடி​யில் 90 மாணவர்​கள் தங்கி குத்​துச்​சண்டை பயிற்சி பெறும் வகை​யில் புதிய விளை​யாட்டு விடு​தி, உணவருந்​தும் கூடம், சமையலறை உள்​ளிட்ட வசதி​களு​டன் கட்​டப்பட உள்ளது.

சிறு விளை​யாட்​டரங்​கம்: கோவை மாவட்​டத்​தில், நேரு விளை​யாட்டு வளாகத்​தில் பார்​வை​யாளர்​கள் மாடம் ரூ.4.89 கோடியில் புனரமைத்​து, புதுப்​பிக்​கப்பட உள்​ளது.

அதே​போல் கன்​னி​யாகுமரி மாவட்​டம், குளச்​சல் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் 200 மீ. தடகளப் பாதை, கையுந்து பந்​து, கபாடி, கூடைப்​பந்​து, இறகுப்​பந்​து, கோ-கோ ஆடு​களங்​கள், நீளம் தாண்​டு​தல் ஆகிய விளை​யாட்டு வசதி​கள் மற்​றும் நுழைவு வாயில், நிர்​வாக அலு​வல​கக் கட்​டிடம், கழிப்​பறை வசதி ஆகிய​வற்​றுடன் ரூ.3 கோடி​யில் முதலமைச்​சர் சிறு விளை​யாட்​டரங்​கம் கட்டப்பட உள்​ளது.

அந்த வகை​யில், சென்​னை, கோவை, கன்​னி​யாகுமரி​யில் மொத்​தம் ரூ.10.89 கோடி​யில் விளை​யாட்​டுத் துறை சார்​பில் மேற்​கொள்ளப்​படும் விளை​யாட்டு மேம்​பாட்டு உட்​கட்​டமைப்பு பணி​களுக்​கு, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் சென்னை முகாம் அலு​வல​கத்​தில் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்​நிகழ்​வில் தயாநிதி மாறன் எம்​.பி, நா.எழிலன் எம்​எல்ஏ, விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா, தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர்​ ஜெ.மேக​நாத ரெட்​டிஉள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *