கோவை,
கோவை ராயல்கேர் மருத்துவமனையில் முதல் முறையாக வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை நடந்தது. மருத்துவமனையில் தலைவர் டாக்டர் க.மாதேஸ்வரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இதை வெற்றிகரமாக செய்தனர்.
கோவை நீலாம்பூரில் ராயல்கேர் மருத்துவமனையில் முதல்முறையாக இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் க.மாதேஸ்வரன் தலைமையில், இருதய மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜி. பிரதீப், இருதய சிகிச்சை மயக்கவியல் ஆலோசகர் டாக்டர் எஸ்.கிருபானந்த் ஆகியோர் இந்த சிக்கலான சிகிச்சையை குறுகிய நேரத்திலேயே சிறப்பாக செய்து முடித்தனர்.
மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் க.மாதேஸ்வரன் கூறுகையில், “ ராயல்கேர் மருத்துவ வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல். சர்வதேச தரத்திற்கு ஏற்ப இந்த மருத்துவமனை தொழில்நுட்பத்தை அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது.

பல தொழில்நுட்பங்கள் இந்தியாவிலேயே இந்த பகுதியில் முதல் முதலாக அறிமுகம் செய்தது. பல உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை வசதியுள்ள மருத்துவ மனையில் முதல் முறையாக இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது.
இந்த சிறந்த சாதனையை செய்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நிர்வாகத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,” என்றார்.
ராயல்கேர் மருத்துவமனை, சர்வதேச இணை ஆணையம் (ஜே.சி.ஐ), மறுவாழ்வு தரநிர்ணய கமிஷன் (சி.ஏ.ஆர்.எப்), அறுவை சிகிச்சை ஆய்வு கழகம் (அமெரிக்கா), தேசிய மருத்துவமனை, மருத்துவ சேவை வழங்குவோருக்கான தரநிர்ணய வாரியம் (என்.ஏ.பி.எச்) ஆகியவைகளிடமிருந்து தரமான சேவைக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
கோவை காவல்துறை கே.ஜி.,மருத்துவமனையிலிருந்து 20 கி.மீ.,துாரத்தில் உள்ள நீலாம்பூர் ராயல்கேர் மருத்துவனைக்கு பசுமை வழியை அமைத்து 12 நிமிடங்களில் எடுத்துச் செல்ல உதவி அளித்தது.
ராயல்கேர் மருத்துவமனையில் இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட அர்ப்பணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, தர நிர்ணயம் பெற்ற ஆய்வகங்கள், எக்மோ உட்பட பல வசதிகள், மிகவும் துாய்மைப்படுத்தப்பட்ட அறுவை அரங்கு, விரைவான மதிப்பீட்டு வழிமுறைகள், ஒருங்கிணைந்த ஆதரவு சேவைகள், உள் ஆலோசனை அரங்குகள், நுண்ணுாட்டச்சத்து மற்றும் முடநீக்கியல் துறை போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாக உள்ளன.