முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு இன்று பாராட்டு விழா!

சென்னை:
இசையமைப்பாளர் இளை​ய​ராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதல்​வர் மு.க.ஸ்டாலின் தலை​மை​யில் இன்று மாலை சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் பாராட்டு விழா நடை​பெறுகிறது.

இசைஞானி இளை​ய​ராஜா தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம், இந்தி போன்ற பல்​வேறு மொழிகளில் 1,500க்​கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில், 8,500க்​கும் மேற்​பட்ட பாடல்​களுக்கு இசையமைத்​துள்​ளார்.

கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது.

முழு மேற்​கத்​திய பாரம்​பரிய சிம்​பொனி இசை சிகரத்​தை​யும் தொட்டு சாதனை படைத்​தார்.

இதை முன்​னிட்​டு, ‘‘இளையராஜாவின் அரை நூற்​றாண்டு கால திரை​ இசைப் பயணத்தை அரசின் சார்​பில் கொண்​டாட முடி​வெடுத்​துள்​ளோம்” என முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார்.

அதன்​படி, இன்று மாலை 5.30 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் சென்​னை, நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் திரையுல​கில் பொன் விழா காணும் இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு தமிழக அரசின் சார்​பில் மிகப்​பெரிய அளவில் பாராட்டு விழா நடை​பெறுகிறது.

இந்​நிகழ்ச்​சி​யின் தொடக்​கத்​தில் இன்​னிசை நிகழ்ச்​சி​யும், அதனை தொடர்ந்து இளை​ய​ராஜா​வி்ன் சிம்​பொனி இசை நிகழ்ச்​சி​யும் நடை​பெறும்.

விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வரவேற்​புரை​யாற்​றுகிறார். முதல்​வர் ஸ்டா​லின் தலைமையுரையாற்​றுகிறார்.

நடிகர்​கள் கமல்​ஹாசன், ரஜினி​காந்த் ஆகியோர் வாழ்த்​துரை வழங்​கு​கின்​றனர். இறு​தி​யில் இளை​ய​ராஜா ஏற்​புரை​யாற்​றுகிறார்.

முன்​ன​தாக, நேற்று முன்​தினம், இவ்​விழாவுக்​கான அழைப்​பிதழை, நடிகர்​கள் ரஜினி, கமல் மற்​றும் இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா​விடம், அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் மற்​றும் அதி​காரி​கள் நேரில் வழங்​கியது குறிப்​பிடத்​தக்​கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *