வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்லை என தவெக தலை​வர் விஜய் சொல்​வது மக்​கள் மனதில் எப்​போதும் நிலைக்காது – சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கருத்து!!

சென்னை:
வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்லை என தவெக தலை​வர் விஜய் சொல்​வது மக்​கள் மனதில் எப்​போதும் நிலைக்காது என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

அரசு மனநல மருத்​து​வ​மனை சார்​பில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரை​யில் நேற்று நடந்த “உலக தற்​கொலை தடுப்பு வாரம்” நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், தற்​கொலை தடுப்பு விழிப்​புணர்வு உறுதி மொழியை ஏற்​றார். பின்​னர் துண்டு பிரசுரம் விநி​யோகித்​து, விழிப்​புணர்வு பதாகை ஏந்தி மனித சங்​கிலி நிகழ்​வில் பங்​கேற்​றார்.

இதில் மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, பொதுசு​கா​தா​ரம் மற்​றும் நோய்த் தடுப்பு மருந்​துத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம், சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை – மருத்​துவ கல்​லூரி டீன் சாந்​தா​ராம், அரசு மனநல மருத்​து​வ​மனை இயக்​குநர் மாலை​யப்​பன், மருத்​து​வர் பூர்ண சந்​திரிகா மற்​றும் மருத்​து​வர்​கள், செவிலிய மாணவர்​கள் கலந்து கொண்​டனர்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் மா.சுப்​பிரமணி​யன் கூறிய​தாவது: தமிழகத்​தில் கடந்த 2001-ம் ஆண்டு அதிக தற்​கொலைகள் நிகழ்ந்​திருக்​கும் ஆண்​டாக இருந்​தது. இதனை தடுக்​கும் வித​மாக சாணிப்​பவுடருக்கு தடை, எலி மருந்து விற்​பனைக்கு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.

தமிழகம் முழு​வதும் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் மனம் என்​கின்ற மனநல மருத்​துவ சேவை​கள் அமைப்​பு​கள் தொடங்​கப்​பட்டு மருத்​து​வம், பொறி​யியல் மற்​றும் கலைக்​கல்​லூரி மாணவர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் பணி நடை​பெற்று வரு​கிறது. தற்​கொலை​யோடு சேர்த்​து, போதை தடுப்பு விழிப்​புணர்​வு, போதைக்கு எதி​ரான விழிப்​புணர்வு அமைப்​பு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

வாக்​குறு​தி​கள் இன்​னும் நிறைவேற்​ற​வில்லை என்று தவெக தலை​வர் விஜய் சொல்​வது மக்​கள் மனதில் எப்​போதும் நிலைக்​காது. மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தில் 1.15 கோடி பேர் மகிழ்ச்​சி​யோடு பயன்​பெற்று வரு​கிறார்​கள். தினந்​தோறும் 50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் விடியல் பயணம் மூலம் பயன்​பெறுகின்​றனர்.

புது​மைப் பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டங்​களால் மாதம் ரூ.1,000 உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​தி​யா​வில் உயர்​கல்விக்கு செல்​பவர்​களின் எண்​ணிக்கை 29 சதவீத​மாக உயர்ந்​திருக்​கும் நிலை​யில், தமிழகத்​தில் மட்​டும் 53 சதவீத​மாக உள்​ளது. விஜய் போன்​றவர்​கள் எல்​லாம் இதையெல்​லாம் மறக்கக் கூடாது.

பொருளா​தார வளர்ச்சி பட்​டியலில் குஜ​ராத், கோவா உள்​ளிட்ட 6 மாநிலங்​கள் இடம் பெறவே இல்​லை. இந்​தியா முழு​மைக்​கும் பொருளா​தார வளர்ச்சி என்​பது 6.5 சதவீதம். தமிழகத்​தின் பொருளா​தார வளர்ச்சி என்​பது 11.19 சதவீதம் ஆகும். விஜய் போன்​றவர்​கள் இதுகுறித்து படித்து தெரிந்​து கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *