அமெரிக்காவை நம்பினால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வங்கி சேவைகள் முழுமையாக முடங்கிவிடும் – இந்தியாவை எச்சரிக்கும் உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (GTRI)…

நியூயார்க்:
அமெரிக்காவின் மென்பொருள் மற்றும் கிளவுட் சேவைகளை இந்தியா அதிக அளவில் சார்ந்துள்ளது.

இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (GTRI) எச்சரித்துள்ளது.

அமெரிக்க அரசு இந்த சேவைகளுக்கான இந்தியாவின் அணுகலை நிறுத்தினால், ஒரே இரவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வங்கி சேவைகள் முழுமையாக முடங்கிவிடும் என்றும் GTRI சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா கிளவுட் தொழிநுட்பம் அமெரிக்க அமைப்புகளின் மீதான அதிகப்படியான சார்புநிலையைக் குறைக்கும் வகையில், இந்தியா தனது சொந்த கிளவுட் தொழில்நுட்பம், உள்நாட்டு இயங்குதளங்கள் (OS), இணைய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை அவசரமாக உருவாக்க வேண்டும் என்று இந்தியாவை தளமாகக் கொண்ட உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி (GTRI) வலியுறுத்தியுள்ளது. தற்போதைய இந்த சார்புநிலை பொருளாதார மற்றும் பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குகிறது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியாவின் தொலைபேசிகள், கணினிகள், பாதுகாப்பு மற்றும் அரசு பயன்பாடுகள் பெரும்பாலும் அமெரிக்க அமைப்புகளை நம்பியேஇயங்குகின்றன என்பதை GTRI ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் அரசின் ஒரு முடிவு இது அனைத்தையும் முடக்கி விடாக்கிவிடும். டிஜிட்டல் கொடுப்பனவுகள், வரி தாக்கல் மற்றும் அரசு சேவைகளை உடனடியாக முடக்கிவிடும்.

500 மில்லியனுக்கும் அதிகமான இந்திய ஸ்மார்ட்போன்கள் தற்போது கூகிளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுவதால் மொத்த நாடும் பாதிக்கப்படலாம்.

இதற்கு தீர்வு காண, GTRI ஒரு “டிஜிட்டல் ஸ்வராஜ் திட்டத்தை” முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் 2030-க்குள் இயங்குதளம், கிளவுட், இணைய பாதுகாப்பு மற்றும் தரவு சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இந்தியாவை தற்சார்பு அடையச் செய்ய இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறுகிய காலத்தில் (1-2 ஆண்டுகள்), முக்கிய தரவுகளுக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட கிளவுட் ஹோஸ்டிங், தேசிய ஓ.எஸ் திட்டம் மற்றும் முக்கிய அமைச்சகங்களில் லினக்ஸ் பைலட் திட்டங்கள் அவசியம் என இந்தத் திட்டம் கூறுகிறது.

அடுத்த சில காலத்தில் (3-5 ஆண்டுகள்), அரசு அமைப்புகள் முழுமையாக இந்திய மென்பொருளுக்கு மாற வேண்டும்.

நீண்ட கால நோக்கில் (5-7 ஆண்டுகள்), கிளவுட் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுடன் சமநிலையை அடைய வேண்டும். பாதுகாப்பு மற்றும் முக்கிய துறைகளில் வெளிநாட்டு இயங்குதளங்களுக்குப் பதிலாக உள்நாட்டு இயங்குதளங்களை பயன்படுத்த வேண்டும்.

சீனா , ரஷ்யா ஆகியவை அமெரிக்காவில் தொழில்நுட்பத்தை நம்பி இல்லை. அதேபோல் இந்தியாவும் அமெரிக்காவை நம்பாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

உள்நாட்டு தரவு சேமிப்பு விதிகள், டிஜிட்டல் பரிவர்த்தனை வரிகள் மற்றும் உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை GTRI பரிந்துரைத்துள்ளது.

சீனா மற்றும் ஐரோப்பாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியா இதில் மிகவும் பின்தங்கி உள்ளது. முழுக்க முழுக்க அமெரிக்காவை நம்பி உள்ளது. அமெரிக்காவின் மென்பொருள் மற்றும் கிளவுட் சேவைகளை இந்தியா அதிக அளவில் சார்ந்துள்ளது.

இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (GTRI) எச்சரித்துள்ளது.

அமெரிக்க அரசு இந்த சேவைகளுக்கான இந்தியாவின் அணுகலை நிறுத்தினால், ஒரே இரவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வங்கி சேவைகள் முழுமையாக முடங்கிவிடும் என்றும் GTRI சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *