தமிழகத்தில் மதிய உணவு உட்பட பல்​வேறு நலத் திட்​டங்​களுக்கு மத்​திய அரசு ஆண்​டு​தோறும் நிதி வழங்கி வரு​கிறது – தர்​மேந்​திர பிர​தான்!!

சென்னை:
குறுகிய அரசி​யல் பார்​வை​யுடன் மும்​மொழிக் கொள்​கையை பிரச்​னை​யாக்​கு​வ​தாக மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கூறி​னார்.

சென்னை ஐஐடி​யில் நடை​பெற்ற ‘தக் ஷின பதா’ மாநாட்​டில் கலந்​து​கொண்ட தர்​மேந்​திர பிர​தான், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது:

கல்வி நிதி விவ​காரம் குறித்து 2 ஆண்​டு​களாக பேசிவரு​கிறேன். மீண்​டும் சொல்​கிறேன். இந்த விவ​காரத்தை தமிழக அரசு அரசியலாகவே பார்க்​கிறது.

இது தொடர்​பாக நான் நாடாளுமன்​றத்​தில் பேசி​யுள்​ளேன். தேசிய கல்விக் கொள்​கையை நாடே ஏற்​றுக் கொண்​டுள்​ளது.

தமிழகத்தில் மதிய உணவு உட்பட பல்​வேறு நலத் திட்​டங்​களுக்கு மத்​திய அரசு ஆண்​டு​தோறும் நிதி வழங்கி வரு​கிறது. நடப்பாண்டு வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்​டிய கல்வி சார்ந்த நிதியை மத்​திய அரசு வழங்​கி​யுள்​ளது.

ஆர்​டிஇ திட்​டத்​துக்​கான நிதி பங்​கீட்​டில் நீதி​மன்​றம் சில உத்​தர​வு​களை கொடுத்​துள்​ளது. அதை பின்​பற்றி செயல்​படு​வோம். சமக்ர சிக் ஷா நிதி விவ​காரம் குறித்து தமிழக அமைச்​சர் அன்பில் மகேஸ் மற்​றும் திமுக எம்​.பி. கனி​மொழி என்னை சந்​தித்​தனர்.

மத்​திய அரசின் ஒப்​பந்​தத்தை ஏற்க வேண்​டும் என்று அவர்​களிடம் நான் தெளி​வாக கூறி​விட்​டேன்.

அப்​போது​தான் சமக்ர சிக் ஷா நிதியை மத்​திய அரசு வழங்​கும். இது மாணவர்​களின் நலனுக்​கான விஷ​யம். இதில் அரசி​யல் கூடாது. இருதரப்​பும் பரஸ்பர மரி​யாதை​யுடன் செயல்பட வேண்​டும்.
l

தமிழகத்​தில் மாநில அரசு மும்​மொழி கொள்​கையை அரசி​ய​லாக்​கிக் கொண்​டிருக்​கிறது.

தாய்​மொழி​யுடன் ஏதாவது இரு மொழிகளை கற்​கலாம் என்​பதே தேசிய கல்விக்​கொள்​கை​யின் நோக்​கம். 3-வது மொழி​யாக ஏதேனும் ஒரு​மொழியை படிக்​கச் சொல்​கிறோம்.

மத்​திய அரசு எந்த மொழியை​யும் திணிக்​க​வில்​லை. மாறாக 3-வது மொழியை கற்​றலை​தான் ஊக்​குவிக்​கிறோம். நாட்​டில் 10 சதவீதம் பேர் மட்​டுமே ஆங்​கிலம் பேசுகிறார்​கள். மீத​முள்​ளவர்​கள் தாய் மொழியை பேசுகின்​றனர்.

குறுகிய அரசி​யல் பார்வை உள்​ளவர்​கள்​தான் இதை பிரச்​சினை​யாக்​கு​கின்​றனர். அரசி​யல் காரணங்​களுக்​காக மொழிப் பிரி​வினையை உரு​வாக்க முயற்​சிப்​பது தவறானது. நான் ஒடியா மொழியை சேர்ந்​தவன். என் மொழியை நேசிக்​கிறேன்.

ஆனால், மற்ற மொழிகளை​யும் மதிக்​கிறேன். மொழி​யால் பிரி​வினை ஏற்​படுத்​தி​ய​வர்​கள் தோற்​றுள்​ளனர். தற்​போது சமூகம் அரசி​யலை​விட முன்​னேறி​விட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

100 சதவீதம் தேர்ச்சி பெறும்: சென்னை ஐஐடி நிகழ்வில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை அனைவரும் எழுத்தறிவு பெற புதிய திட்டங்களை கொண்டுள்ளது.

கற்றல், கற்பித்தலை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் பரிந்துரைகளையும் வழங்குகிறது.

அதன்படி அடுத்த 20 ஆண்டுகளில் 100 சதவீத கல்வியறிவை பெற்ற நாடாக இந்தியா மாறும் என்றார்.

மேலும், தென்னிந்திய மக்கள் தங்கள் நாகரீகத்தை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். நம்நாடு பல்வேறு கலாச்சாரங்களால் நிறைந்தது என்றும் பேசினார்.

காங்​கிரஸ் கண்​டனம்: இதனிடையே, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “தமிழகத்​துக்கு கல்வி நிதி வழங்​கப்​படு​வதற்கு தேசிய கல்விக் கொள்​கையை ஏற்க வேண்​டும் என்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கூறியது கண்​டிக்​கத்​தக்​கது”என்​று தெரி​வித்​துள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *