கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்ததாக தனது இரங்கலை தெரிவித்த நடிகர் மம்மூட்டி !!

கொச்சி:
கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்ததாக நடிகர் மம்மூட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்” என மம்மூட்டி தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

திரைத்துறையை சார்ந்த ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், விஷால், ரவி மோகன், நடிகையும் பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத், விஷால், கார்த்தி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெவித்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவியாக மத்திய அரசு ரூ.2 லட்சம், தமிழக அரசு ரூ.10 லட்சம் மற்றும் தவெக தரப்பில் ரூ.20 லட்சமும் வழங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *