கிரிக்கெட்டை இந்தியா அவமதித்து விட்டது – பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா!!

இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல. அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம்.

தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் என்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார். கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்துள்ளார். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி அவர் அப்படி நடந்துகொண்டார். அது பரவாயில்லை.

நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் அவர்கள் மிகவும் அவமரியாதையாக நடந்துகொண்டனர். என் வாழ்வில் இது நடப்பதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை.

இந்தத் தொடரில் நடந்தவை மிகவும் மோசமானவை, இது ஒரு கட்டத்தில் நிற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல

இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதைப் பார்த்தால், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை.

மக்கள் எங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் இப்படி நடந்துகொண்டால், நாங்கள் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவில்லை.

ACC-க்கு தலைவர் ஒருவர் இருந்தால் அவரிடம் கோப்பை வாங்குவதுதான் முறை. நீங்கள் அதை அவரிடமிருந்து வாங்காமல், வேறு எப்படி வாங்குவீர்கள்?
நான் இதை மீண்டும் சொல்கிறேன்.

என்ன நடந்ததோ அது தவறு. அது நடந்திருக்கக்கூடாது. எனவே அதைச் செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு சல்மான் ஆகா கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *