பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவிப்பு!!

பீகார்;
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


முழுமையான பெரும்பான்மையைப் பெற மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 இடங்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.


டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும் என்று தான் நம்புவதாக ஆம் ஆத்மி பீகார் மாநில பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அறிவிப்பின் ஒரு பகுதியாக, அஜேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ராகேஷ் யாதவ் ஆகியோர் 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டனர்.
“எங்கள் கூட்டணி மக்களுடன் உள்ளது.

நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்” என்று அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் அபினவ் ராய் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *