மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!

சிவகங்கை.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது சகோதரர்களின் 224-ம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது.

இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்ட 6.5 கிலோ எடையுள்ள வெள்ளி கவசத்தினை வழங்கினார். அதன்பின்னர் அங்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

கேள்வி: வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி?

பதில்: தமிழக மக்கள் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க உள்ளோம். அதை முதலில் உங்களிடம் சொல்லிவிட்டு தான் மற்றவர்களிடம் சொல்வோம். விஜய் கட்சி ஆரம்பித்த உடனேயே சொல்லிவிட்டேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

கரூர் துயர சம்பவம் நடந்து விட்டது. அங்கு சென்று அனுதாபம் தெரிவித்தால் என்ன இங்கு அழைத்து வந்து அனுதாபம் தெரிவித்தால் என்ன.

அனுதாபம் தெரிவித்துவிட்டார். அதை பாராட்ட வேண்டுமே தவிர , காரணங்களை பற்றி பேசுவது சரியாக இருக்காது. உண்மையிலேயே இது பாராட்ட கூடியது.
கேள்வி: 2026-ல் எந்த கட்சி ஆட்சிக்கு வரும்?

பதில்: இன்றைய சூழ்நிலையில் எல்லாக் கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அதிமுக பிரிந்து கிடக்கிறது; பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாசுக்கும், அன்புமணிக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *