சென்னை,
தனுஷ் – மாரி செல்வராஜ் இணைப்பில் உருவாகும் படம் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பைசன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக அனைவரும் குறிப்பிட்டு இருந்தார்கள். மேலும், தற்போது இந்தியளவில் உள்ள விமர்சகர்கள் மத்தியிலும் ‘பைசன்’ வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கிறது.
‘பைசன்’ படத்தினை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவிருப்பதாக மாரி செல்வராஜ் பேட்டியொன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளது. முதன் முறையாக இப்படத்துக்காக பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார் மாரி செல்வராஜ். இப்படம் முழுக்க வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் படத்தினை வேல்ஸ் நிறுவனம் மற்றும் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் தொடங்கும் எனத் தெரிகிறது.