சென்னை,
ராம் கோபால் வர்மா அடுத்து இயக்கும் ஹாரர் திரைப்படம், ‘போலீஸ் ஸ்டேஷன் மே பூத்’. இதில் மனோஜ் பாஜ்பாய், ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.
ஷூல், சத்யா, சர்க்கார் 3 படங்களுக்குப் பிறகு ராம் கோபால் வர்மா படத்தில் இணைந்துள்ளார் மனோஜ் பாஜ்பாய். இந்நிலையில், இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். அவருடைய முதல் தோற்றத்தை ராம் கோபால் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். முன்னதாக இப்படம் பற்றிய அறிவிப்பில், “உங்களுக்கு பயம் என்றால் போலீஸ் ஸ்டேஷன் ஓடுவீர்கள்! ஆனால், போலீஸே பயப்படும்போது அவர்கள் எங்கே ஓடுவார்கள்?” என்று ராம் கோபால் வர்மா கூறியிருந்தார்.
மற்றொரு பதிவில், “ஒரு பயங்கரமான ரவுடி, என்கவுன்ட்டர் போலீஸால் கொல்லப்படுகிறார். அந்த ரவுடி போலீஸ் ஸ்டேஷனை வேட்டையாட பேயாகத் திரும்பி வருகிறார். அதனால்தான் போலீஸ் ஸ்டேஷன் மே பூத்” என்று தலைப்பு வைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.