புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.
திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். வேறு வேலை இல்லாத எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனங்களை பற்றி கவலையில்லை.
எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. எஸ்.ஐ.ஆர் தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறோம். நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.