பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில்……..

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி – 189 ( பா.ஜ.க. – 84 , ஜே.டி.யு. – 74 , எல்.ஜே.பி. – 23, ஆர்.எல்.எம். – 4 , மற்றவை – 4)
இந்தியா கூட்டணி – 50 (ஆர்.ஜே.டி. – 36 , காங்கிரஸ் – 6 , இடது சாரிகள் – 7, விஜபி – 1)


ஜன் சுராஜ் -0


மற்றவை – 4

பீகார் தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள ராகுலும், பிரியங்காவும் இந்தியா திரும்புவார்களா? – பாஜக கேள்வி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் ஐடிவிங் தலைவர் அமித் மால்வியா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவிடம் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் வலைதளத்தில், “தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள ராகுல் காந்தியும் பிரியங்கா வத்ராவும் இந்தியா திரும்புவார்களா?..

அல்லது அவர்களின் கட்சி மேலும் பேரழிவில் மூழ்கும் போது அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டில் விடுமுறையில் இருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி – 193 ( பா.ஜ.க. – 83 , ஜே.டி.யு. – 80 , எல்.ஜே.பி. – 23, ஆர்.எல்.எம். – 4 , மற்றவை – 3)
இந்தியா கூட்டணி – 46 (ஆர்.ஜே.டி. – 34 , காங்கிரஸ் – 5 , இடது சாரிகள் – 7)


ஜன் சுராஜ் -0


மற்றவை – 4

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தேஜஸ்வி யாதவ் பின்னடைவு


பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் ( 10,957 வாக்குகள்) பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார் 12,230 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.

பீகாரில் எஸ்.ஐ.ஆர்.தான் முன்னிலையில் இருக்கிறது.. பா.ஜ.க. அல்ல: காங்கிரஸ் தலைவர் கடும் தாக்கு

பீகாரில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதனால் அக்கூட்டணி கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், பீகாரில் எஸ்.ஐ.ஆர்.தான் முன்னிலையில் இருக்கிறது என்றும் பாஜ.க.-ஜே.டி.யு. அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ் கூறி உள்ளார்.

மேலும், பீகாரில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்திருப்பதற்கு தேர்தல் ஆணையமும், அது நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியும்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.


வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் குறித்து ஏராளமான ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டபோதும் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும், இது ஜனநாயக படுகொலை என்றும் அவர் கூறியிருக்கிறார்.


பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் சட்டசபை தேர்தல்: ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாத பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி

பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-
தேசிய ஜனநாயக கூட்டணி – 191 ( பா.ஜ.க. – 80 , ஜே.டி.யு. – 84 , எல்.ஜே.பி. – 22, ஆர்.எல்.எம். – 1 , மற்றவை – 4)
இந்தியா கூட்டணி – 49 (ஆர்.ஜே.டி. – 37 , காங்கிரஸ் – 7 , இடது சாரிகள் – 5)


ஜன் சுராஜ் -0


மற்றவை – 3

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி – 185 ( பா.ஜ.க. – 78 , ஜே.டி.யு. – 80 , எல்.ஜே.பி. – 22, ஆர்.எல்.எம். – 1 , மற்றவை – 4)
இந்தியா கூட்டணி – 54 (ஆர்.ஜே.டி. – 41 , காங்கிரஸ் – 7 , இடது சாரிகள் – 6)


ஜன் சுராஜ் -1


மற்றவை – 3

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி – 180 ( பா.ஜ.க. – 79 , ஜே.டி.யு. – 75 , எல்.ஜே.பி. – 17, ஆர்.எல்.எம். – 1 , மற்றவை – 3)
இந்தியா கூட்டணி – 59 (ஆர்.ஜே.டி. – 45 , காங்கிரஸ் – 7 , இடது சாரிகள் – 7)


ஜன் சுராஜ் -1


மற்றவை – 3

பீகார் தேர்தல் முடிவுகள்: பாஜகவின் மைதிலி தாக்கூர் தொடர்ந்து முன்னிலை

பீகார் சட்ட சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், அலிநகரில் பாஜகவின் மைதிலி தாக்கூர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தேர்தல் ஆணையத்தின் ஆரம்பகால நிலவரங்களின்படி, சிங்கர் மற்றும் பாஜக வேட்பாளர் மைதிலி தாக்கூர், தனது ஆர்ஜேடி போட்டியாளரான பினோத் மிஸ்ராவை விட 1,826 வாக்குகள் வித்தியாசத்தில் அலிநகரில் முன்னிலை வகித்து வருகிறார்.

7 மாநிலங்களில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம்

7 மாநிலங்களில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முன்னிலை நிலவரம்

ஜம்மு காஷ்மீர்: பத்கம் – தேசிய மாநாட்டுக் கட்சி, நக்ரோதா – பாஜக

ராஜஸ்தான்: ஆண்டா – காங்கிரஸ்


மிசோரம்: தம்பா – மிசோ தேசிய முன்னணி


ஒடிசா: நவுபாதா – பாஜக


பஞ்சாப்: தார்ன் தரன் – ஆம் ஆத்மி


ஜார்கண்ட்: காட்சிலா – ஜே.எம்.எம்


தெலுங்கானா: ஜூப்ளி ஹில்ஸ் – காங்கிரஸ்

பீகார் தேர்தல் முடிவுகள்: தொடர்ந்து முன்னிலையில் பாஜக கூட்டணி.. காங்கிரஸ் பின்னடைவு

243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம்:-
தேசிய ஜனநாயக கூட்டணி – 161 ( பா.ஜ.க. – 70 , ஜே.டி.யு. – 74 , மற்றவை – 17)
இந்தியா கூட்டணி – 77 (ஆர்.ஜே.டி. – 59 , காங்கிரஸ் – 14 , மற்றவை – 4)
ஜன் சுராஜ் -2
மற்றவை – 3

2 தொகுதிகளில் பிரசாந்த் கிஷோரின் கட்சி முன்னிலை

பீகார் பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது.


தற்போதைய முன்னிலை நிலவரம்


தேசிய ஜனநாயக கூட்டணி – 159


இந்தியா கூட்டணி – 80


ஜன் சுராஜ் -2


மற்றவை – 2

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *