சென்னை:
ராஜமவுலி – மகேஷ் பாபு இணைப்பில் உருவாகும் படத்திலிருந்து பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நாயகியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அவர் மண்டாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நீண்ட வருடங்கள் கழித்து இந்திய படங்களுக்கு பிரியங்கா சோப்ரா திரும்பியிருப்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவுக்காக உருவாக்கப்பட்ட பாடல் வெளியிடப்பட்டது. ஸ்ருதிஹாசன் பாடியிருந்த இப்பாடல் இணையத்தில் கொண்டாடப்பட்டது.
அதேவேளையில், பிரித்விராஜின் அறிமுக போஸ்டர் கடும் கிண்டலுக்கு ஆளானது. தற்போது வரை பல்வேறு வடிவங்களில் மாற்றி அப்போஸ்டரை கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 15-ம் தேதி நடைபெறும் அறிமுக விழாவில், இப்படத்தின் பெயர் மற்றும் மகேஷ் பாபுவின் லுக் உள்ளிட்டவற்றை வெளியிடவுள்ளது படக்குழு.
இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவினை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.