கோலாலம்பூர்:
சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தியது.
மலேசியாவின் இபோ நகரில் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இப்போட்டி நடைபெற்றது. இரு அணி வீரர்களும் கோலடிக்க முயற்சித்தபோதும் அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் இந்திய வீரர் ரஹீல் ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.