மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும், லஞ்சம் அளித்தவருக்கு ரூ.195 கோடி கமிஷன் கிடைக்கும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் செய்ததாகவும், மதுபான கொள்கை முறைகேடு நடந்த போது 170 செல்போன்களை கெஜ்ரிவால் பயன்படுத்தியுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இதன்காரணமாகவே, அவரது செல்போனின் பாஸ்வேர்டை தர மறுத்து வருவதாகவும், கெஜ்ரிவாலின் கைதுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.