மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல்….எந்தெந்த மாநிலங்களில் எப்போது வாக்குப்பதிவு … முழுபட்டியல்…

டெல்லி ;

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கட்டத்திலும் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளுக்கு, தேர்தல் நடைபெறும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

18வது மக்களவையை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தல், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 19ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், அசாமில் 5 தொகுதிகளுக்கும், பீகாரில் 4 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 1 தொகுதிக்கும் மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கும், மேகாலயாவில் 2 தொகுதிகளுக்கும், மிசோரத்தில் 1 தொகுதிக்கும், நாகாலாந்தில் 1 தொகுதிக்கும், ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், சிக்கிமில் 1 தொகுதிக்கும், திரிபுராவில் 1 தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும், உத்தராகண்டில் 5 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளுக்கும், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 1 தொகுதிக்கும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 1 தொகுதிக்கும், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் 1 தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

2ம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அசாமின் 5 தொகுதிகளுக்கும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 3 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கும், கேரளாவில் 20 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 1 தொகுதிக்கும், ராஜஸ்தானில் 13 தொகுதிகளுக்கும், திரிபுராவில் 1 தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 1 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

3ம் கட்ட வாக்குப்பதிவு, மே 7ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாமில் 4, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 7, கோவாவில் 2, குஜராத்தில் 26, கர்நாடகாவில் 14, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 4 , தாத்ரா நாகர்ஹவேலி மற்றும் டாமன் அண்ட் டையு யூனியன் பிரதேசங்களில் 2 மற்றும் ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஆந்திர பிரதேசத்தில் 25 தொகுதிகளுக்கும், பிகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 4 தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் 17 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

5வது கட்ட தேர்தல் மே 20ம் தேதி 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகாரில் 5, ஜார்க்கண்டில் 3, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தர பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7, ஜம்மு-காஷ்மீரில் 1, லடாக்கில் 1, ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மே 25ம் தேதி 6வது கட்ட தேர்தல் நடைபெறும் போது, 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிகாரில் 8, ஹரியாணாவில் 10, ஜார்க்கண்டில் 4, ஒடிசாவில் 16, உத்தரப்பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 8, தேசிய தலைநகர் பகுதியான டெல்லியில் 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பீகாரில் 8, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 6, பஞ்சாபில் 13, உத்தரப்பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9 மற்றும் சண்டிகரில் ஒரு தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி ஒரே நாளில் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *