ரூ.2,500 கோடி மதிப்​புள்ள 82 கிலோ கோகைன் போதைப் ​பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் கைது!!

புதுடெல்லி:
டெல்​லி​யிலுள்ள குச்சா மகாஜனி மார்க்​கெட்​டில் ஹவாலா ஏஜென்​டாக இருந்​தவர் பவன் குமார். இவர் டெல்​லி, துபாய் இடையே பயணம் செய்து தனது வியா​பாரத்​தைப் பெருக்கி வந்​தார்.

போதைப்​பொருளை கடத்​தும் பணி​யில் ஈடு​பட்டு வந்​த இவர், கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் துபாயி​லிருந்து இந்​தி​யா​வுக்கு ரூ.2,500 கோடி மதிப்​புள்ள 82 கிலோ கோகைன் போதைப்​பொருளை கடத்​தி​யுள்​ளார். அதை டெல்​லி​யிலுள்ள போதைப் பொருள் தடுப்பு அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

மேலும், கடந்த வாரம் ரூ.282 கோடி மதிப்​புள்ள போதைப் பொருளை பவன் குமார் ஆட்​கள் கடத்த முயன்​ற​போது அதை​யும் டெல்லி அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். துபா​யில் இருந்​த​படியே அவர் தனது போதைப்​பொருள் கடத்​தல் தொழிலை செய்து வந்​தார்.

இதனிடையே, பவன் குமாருக்கு எதி​ராக டெல்​லி​யிலுள்ள போதைப்​பொருள் கட்​டுப்​பாட்டு அமைப்​பு (என்​சிபி), சர்​வ​தேச சில்​வர் நோட்​டீஸை பிறப்​பித்​தது.

இதன்​மூலம் உலகம் முழு​வதும் பவன் குமாருக்கு சொந்​த​மான சொத்​துகள், வர்த்தக தொடர்​பு​கள் உள்​ளிட்ட விவரங்​களை கண்​டறிய முடி​யும்.

பவன்குமார் தொடர்​பான வழக்​கு​களை அமலாக்​கத்​துறை விசாரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் அவர் துபா​யில் கைது செய்யப்​பட்டுள்ளார். விரை​வில் அவர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்தப்​படு​வார் என்று அமலாக்கத் துறை வட்​டாரங்​கள்​ தெரிவித்துள்​ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *