முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்!!

திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப் படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்காண விசா கத்திருவிழா, கடந்த 13-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். 9-ம் நாளான நேற்று வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

10-ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். வெளியூர்களில் இருந்தும் நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடை பெற்றது. 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத் தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி னர்.

அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் நேர்த்திக்கடனாக தலையில் வைத்து சுமந்து வந்த பாலில் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது.

அவ்வாறு அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வைகாசி விசாகத்தை யொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப் பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர்.

பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்தி ருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். நகரில் பல்வேறு பகுதிகளில் இருந் தும் பக்தர்கள் சாரை சாரையாக கோவிலை நோக்கி படையெடுத்தனர்.

குறிப்பாக கோரிப்பாளை யம், சிம்மக்கல், நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆண்டாள்புரம், வசந்தநகர், பழங்காநத்தம், பைக்காரா, பசுமலை, மூலக்கரை, திரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையே தெரியாத அள வுக்கு பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

அதிலும் குழந்தை கள் பால்குடங்களை தலை யில் சுமந்து வந்ததை வழி நெடுகிலும் நின்று பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர்.

கடந்த வாரம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத் திய நிலையில் சில நாட்க ளாக பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கமின்றி சாலைகளில் பக்தர்கள் பாதயாத்திரை யாக கோவிலை நோக்கி சென்றனர். அதேபோல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிச னம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

மேலும் கோவிலுக்குள் கூடுதலாக மின்விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அதி காலை 6 மணி முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவி லுக்கு செல்லும் வழிநெடுகி லும் சாலையின் இருபுறமும் பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம், நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஆங் காங்கே மருத்துவம் உள் ளிட்ட அடிப்படை வசதிக ளும் செய்யப்பட்டிருந்தது.

விழாவையொட்டி, மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்ப ரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து விண்ணதிர அரோ கரா கோஷம் எழுப்பினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர்.

இதேபோல் முருகப்பெரு மானின் 6-வது படை வீடான அழகர்மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச் சோலை முருகன் கோவிலி லும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் வெள் ளத்தில் சிறப்பாக நடை பெற்றது.

மலையடிவாரத் தில் இருந்து நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பால் குடம், பல்வேறு காவடிகள் எடுத்து மலைமேல் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத் தில் நீராடி பின்னர் பழ முதிர்ச்சோலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *