ஆடவர் டி 20 கிரிக்​கெட்​டில் குறைந்த பந்​துகளில் அரை சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை பகிர்ந்து கொண்​ட அபிஷேக் சர்மா !!

ஹைதராபாத்:
சையது முஸ்​டாக் அலி டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று ஹைத​ரா​பாத் உப்​பால் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் பஞ்​சாப் – பெங்​கால் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 310 ரன்கள் குவித்து மிரட்​டியது.

சையது முஸ்​டாக் அலி தொடரின் வரலாற்​றில் இது 2-வது அதிகபட்ச ரன் குவிப்​பாக அமைந்​தது. இதற்கு முன்​னர் 2024-ம் ஆண்டு பரோடா அணி சிக்​கி​முக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 349 ரன்கள் குவித்​திருந்​தது.

தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா 52 பந்​துகளில், 16 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 148 ரன்​கள் விளாசி​னார்.

முகமது ஷமி, ஆகாஷ் தீப் ஆகியோரது பந்து வீச்சை அபிஷேக் சர்மா வெளுத்து வாங்​கி​னார்.மற்​றொரு தொடக்க வீர​ரான பிரப்​சிம்​ரன் சிங் 35 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​கள் விளாசினர்.

அபிஷேக் சர்மா பிரப்​சிம்​ரன் ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 12.3 ஓவர்​களில் 205 ரன்​களை வேட்​டை​யாடியது.

இறு​திகட்​டத்​தில் மட்​டையை சுழற்​றிய ரமன்​தீப் சிங் 15 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​களும் சேர்த்​தார். அபிஷேக் சர்மா தனது அரை சதத்தை 12 பந்​துகளில் விளாசி​யிருந்​தார்.

இதன் மூலம் ஆடவர் டி 20 கிரிக்​கெட்​டில் குறைந்த பந்​துகளில் அரை சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா பகிர்ந்து கொண்​டார். 311 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பெங்​கால் அணி​யால் 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 198 ரன்​களே எடுக்க முடிந்​தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் அபிமன்யு ஈஸ்​வரன் 66 பந்​துகளில். 13 பவுண்​டரி​கள், 8 சிக்​ஸர்​களு​டன் 130 ரன்​கள் சேர்த்​தார். 112 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற பஞ்​சாப் அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *