அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடர் – பெல்ஜியம் சாம்பியன்!!

இபோ:
மலேசியாவின் இபோ நகரில் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது.

6 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் நேற்று மோதின.

இதில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

அந்த அணி தரப்பில் 34-வது நிமிடத்தில் ஸ்டாக்ப்ரோஎக்ஸ் திபியூ 34-வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்து அசத்தினார்.

இந்திய அணி கடைசி வரை போராடிய போதிலும் பதில் கோல் அடிக்க முடியால் போனது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *