கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டோனி தன்னிடம் ஒரே அறிவுரையை தான் , இப்போ தான் புரிந்தது – அஸ்வின்!!

விளையாட்டு உலகில் சிறந்த ஐகான், ரோல்மாடல், ஆசான் என பல்வேறு பெருமைகள் கொண்டவராக இருப்பவர் எம்.எஸ்.டோனி. பொதுவாக விளையாட்டு என்றாலே வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஒன்றில் முடிந்து போகும் விஷயம்தான்.

ஆனால் அதில் கற்ற படிப்பினைகளையும், பாடங்களையும், போராட்டங்களையும், நுணுக்கங்களையும் என பல்வேறு விஷயங்களையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்த வல்லவராக இருப்பதால் தான் டோனியை ஒரு தலைவனாகவே பலரும் பார்க்கிறார்கள்.

சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளார். “கேரம் பால்” அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில் 2 பேர் அவற்றில் இவரும் ஒருவர்.

எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின், ரேங்க்களில் விரைவாக உயர்ந்து இந்திய அணிக்கு வலிமையான சக்தியாக மாறினார். இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் தூணாக தொடர்கிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் எம்.எஸ்.டோனியின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றும் அதிர்ஷ்டமும் பெற்றார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டோனி தன்னிடம் ஒரே அறிவுரையை தான் கூறியதாக அஸ்வின் சமீபத்தில் தெரிவித்தார்.

மேலும், அவர் 15 ஆண்டுகளாக சொன்ன அறிவுரை தற்போது தான் தனக்கு புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசும்போது, சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.

ஒருகட்டத்தில் புதிதாக முயற்சிக்கும் உனது வழக்கத்தை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே. தொடர்ந்து உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் இரு என்று கூறினார். அவர் அப்படி சொன்னது கிரிக்கெட் மட்டுமின்றி ஒருவரின் மனவலிமை மற்றும் பல்வேறு விஷயங்களை பற்றி என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *