யு-23 மாநில ‘ஏ’ ஒன்டே டிராபி தொடரின் இறுதி ஆட்​டத்​தில் தமிழக அணி சாம்பியன்!!

மும்பை:
ஆட​வருக்​கான யு-23 மாநில ‘ஏ’ ஒன்டே டிராபி தொடரின் இறுதி ஆட்​டத்​தில் தமிழ்​நாடு – உத்​தர பிரதேசம் அணி​கள் மோதின. மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 49.3 ஓவர்​களில் 297 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

எஸ்​.ஆர்​.ஆ​திஷ் 38 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 53 ரன்​கள் விளாசி​னார். முகமது அலி 57, மானவ் பராக் 57, பூபதி வைஷ்ஷ குமார் 37, ஆர்​.கே.ஜெயந்த் 32 ரன்​கள் சேர்த்​தனர்.

உத்தர பிரதேச அணி தரப்​பில் பிர​சாந்த் வீர் 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். 298 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த உத்தரபிரதேசம் அணி 47.5 ஓவர்​களில் 241 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது.

அதி​கபட்​ச​மாக பிர​சாந்த் வீர் 65 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி​னார்.

சமீர் ரிஸ்வி 41 ரன்​கள் சேர்த்​தார். தமிழக அணி சார்​பில் முகமது அலி 46 ரன்​களை விட்டுக்​கொடுத்து 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 56 ரன்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்ற தமிழக அணி முதன்​முறை​யாக சாம்பியன் பட்​டம்​ வென்​றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *