தமிழ்ப்பற்று, சுயமரியாதை, கல்வி உள்ளிட்டவைகள் அடங்கிய மாநிலத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியாது – வாக்களித்த பின் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கருத்து!

மதுரையில் அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் தனது தாயாருடன் வந்து வாக்களித்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன் உடன் மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தனர்.

தொடர்ந்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்து பேசுகையில், 2 வது சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிடும் அளவிற்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய குடிமகன் என்கிற அடிப்படையில் வாக்களித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

400 இடங்களில் வெற்றி கிடைக்கும் என பாஜக கற்பனையில் உள்ளது.
இந்திய அளவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 220 இடங்களில் இருந்து 240 இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மத நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவைகளில் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

தமிழ்ப்பற்று, சுயமரியாதை, கல்வி உள்ளிட்டவைகள் அடங்கிய மாநிலத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *