கோவை மாவட்டத்தில் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளனர்!!

கோவை:
கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 32.25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 3,117 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த நவம்பர் 6-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பெறப்பட்ட படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த பணியானது நேற்றுடன் முடிவடைந்தது. இதன் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பொதுமக்கள் வழங்க முடியாது.

படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியவர்கள் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதில் 1 லட்சத்து 13 ஆயிரம் இறந்த வாக்காளர்கள் உள்பட முகவரி மாறி சென்றவர்கள், இரட்டைப்பதிவு என மொத்தம் 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளனர். இதில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும் 1 லட்சம் பேர் நீக்கப்படுகின்றனர்’’ என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *