நலிவடைந்த கலைஞர்​களுக்கு சபாக்​கள் வாய்ப்பு அளிக்க வேண்​டும் – நீதியரசர் ஜி.சந்திரசேகரன் வேண்டுகோள்!!

சென்னை:
நலிவடைந்த கலைஞர்​களுக்கு சபாக்​கள் வாய்ப்பு அளிக்க வேண்​டும் என்று நாதப்​ரம்​மத்​தின் சங்​கீத ராக மஹோத்ஸவ விழா​வில் நீதியரசர் ஜி.சந்​திரசேகரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

நாதப்​ரம்​மம் யுனைடெட் கியான் அகாடமி (NUGA) என்ற அமைப்பு பாரம்​பரிய இந்​திய இசை, கல்​வி, கலை, கலாச்​சா​ரம், யோகா ஆகிய​வற்றை மேம்​படுத்​தும் நோக்​கில் கடந்த 2002-ல் தொடங்​கப்​பட்​டது. அது​முதல் இந்​தியா மற்​றும் வெளி​நாடு​களில் இசை நிகழ்ச்​சிகள் நடத்திவரு​கிறது.

நாதப்​ரம்​மம் அமைப்பு தொடங்கி 24 ஆண்​டு​கள் ஆவதை முன்​னிட்டு இந்த ஆண்டு இசை​விழா கோலாகல​மாக தொடங்​கி​யுள்​ளது.

சென்னை மேற்கு மாம்​பலத்​தில் ராஜு தெரு​வில் அமைந்​துள்ள அனுக்​ரஹா ஏசி மினி ஹாலில் கடந்த 19-ம் தேதி சங்​கீத ராக மஹோத்ஸவம் தொடங்​கியது. நாதப்​ரம்​மத்​தின் நிறு​வனர் என்​. சுப்​பிரமணி​யன் வரவேற்​புரை ஆற்​றி​னார்.

தந்​தை, தாய், மகள்: நீதி​யரசரும், கடன் மீட்பு மேல்​ முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​தின் (சென்​னை) தலை​வரு​மான ஜி.சந்​திரசேகரன், விழாவை தொடங்​கி​வைத்​தார்.

நாதஸ்​வரக் கலைஞர் எட அன்​ன​வாசல் மணிசங்​கர், வயலின் கலைஞரும், திரு​வாருர் இசைப் பள்ளி ஆசிரியை​யு​மான ஜெயந்தி மணிசங்​கர், சட்​டக் கல்​லூரி மாண​வி​யும் தவில் கலைஞரு​மான அமிர்​தவர்​ஷினி மணி சங்​கர் ஆகியோருக்கு ‘நாத ஸ்வரலய​கான மணி​கள்’ விருதை வழங்கி கவுர​வித்​தார்.

நிகழ்ச்​சிய பேசிய அவர்,“திறமை இருந்​தும் வாய்ப்புகிடைக்​காதவர்​களுக்கு சபாக்​கள், நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்​டும். நலிவடைந்த கலைஞர்​களுக்​கும் நிகழ்ச்​சிகள் ஏற்​பாடு செய்து தர வேண்​டும்.

ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேருக்கு (தந்​தை, தாய், மகள்) சேர்த்து விருது தரு​வது இதுவே முதல் முறை. இளம் தலை​முறையினருக்கு அவர்​கள் பெற்​றோரின் ஊக்​கு​விப்பு, ஆதரவு அவசி​யம். அந்த வகை​யில் அமிர்​தவர்​ஷினிக்கு அவரது பெற்​றோர் மிக​வும் உறு​துணை​யாக இருக்​கின்​றனர்” என்​றார்.

இசை என்பது அரு​மருந்​து: ஏற்​புரை வழங்​கிய ஜெயந்தி மணிசங்​கர், “இசை என்​பது அரு​மருந்​து. அனைத்து கவலைகளை​யும் மறக்​கச் செய்​வது இசை.

குடும்​பத்​தில் உள்ள அனை​வரும் இசை​யுடன் தொடர்​பில் இருப்​ப​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக உள்​ளது. மூவரும் சேர்ந்து விருது பெறு​வதை மிக​வும் பாக்​கிய​மாக கருதுகிறேன்” என்​றார்.

நாதப்​ரம்​மத்​தின் கவுரவ செயலர் மருத்​து​வர் டி.பத்​ரி​நா​ராயணன் நன்​றி​யுரை வழங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் ரோட்​டேரியன் கே.சீனி​வாசன்​ உள்​ளிட்​டோர்​ பங்கேற்றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *