ஞாயிற்றுக்கிழமையில் வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது!!

இந்த ஆண்டு தை அமாவாசை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவது மிகவும் விசேஷமானது. ஞாயிறு என்றால் சூரியன். சூரிய பகவான் தான் தந்தை வழி உறவுகளுக்கு காரணமானவர்.

அவர் வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கும் தை மாதத்தில், அவருக்குரிய ஞாயிற்றுக்கி ழமையில் வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரனான ஒன்றாக இருக்கும் காலம் ஆகும்.

பிதுர்கார்களான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. அமாவா சையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையில் பிறந்தவர்கள் புத்தி மிகவும் கூர்மையாகச் செயல் புரியும்.

ஆகையால் அவர்கள் அறிவை சரியான முறையில் செயல் படுத்தினால் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *