ஆஸ்​திரேலியன் ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்னிஸ் போட்​டி; சபலென்​கா, ஜிவேரேவ், அல்​க​ராஸ் முன்னேற்றம்!!

மெல்​பர்ன்:
ஆஸ்​திரேலியன் ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்னிஸ் போட்​டி​யின் அடுத்த சுற்​றுக்கு ஸ்பெ​யின் வீரர் கார்​லோஸ் அல்​க​ராஸ், ஜெர்​மனி வீரர் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், பெலாரஸ் வீராங்​கனை அரினா சபலென்கா ஆகியோர் முன்​னேற்​றம் கண்​டுள்​ளனர்.

ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்​னிஸ் தொட​ரான ஆஸ்​திரேலிய ஓபன் ஆஸ்​திரேலி​யா​வில் உள்ள மெல்​பர்ன் நகரில் நேற்று தொடங்​கியது. வரும் பிப்​ர​வரி 1-ம் தேதி வரை இப்​போட்டி நடை​பெற உள்​ளது.

நேற்று நடை​பெற்ற மகளிர் முதல் சுற்​றுப் போட்​டி​யில் முதல் நிலை வீராங்​க​னை​யான அரினா சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட்​களில் பிரான்ஸ் வீராங்​கனை டியான்ட்​சோவா ரககோட்​டோமங்கா ராஜானோவை வீழ்த்​தி​னார்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் முதல் நிலை வீரரான கார்​லோஸ் அல்​க​ராஸும், வைல்ட் கார்ட் மூலம் போட்​டிக்​குள் நுழைந்த ஆஸ்​திரேலிய வீரர் ஆடம் வால்டனும் மோதினர்.

இதில் அல்​க​ராஸ் 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்​கில் ஆடம் வால்​டனை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மற்​றொரு ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 3-ம் நிலை வீர​ரான ஜெர்​மனியின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ் 6-7(1/7), 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்​கில் கனடா வீர​ரான கேப்​ரியல் டியாலாவை சாய்த்​தார். மற்ற ஆட்​டங்​களில் பிரிட்​டனின் ஆர்​தர் பெரி 7-6 (7/1), 6-4, 6-1 என்ற செட்கணக்கில் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இத்தாலி வீரர் பிளே​வியா கோபாலியை​யும், தரவரிசையில் 29-வது இடத்​தில் உள்ள பிரான்​சிஸ் டியாபோ 7-6 (7/4), 6-3, 6-2 என்ற கணக்​கில் ஆஸ்திரேலியாவின் ஜேசன் குப்​லரை​யும், அர்​ஜெண்​டினா வீரர் பிரான்​சிஸ்கோ காம்​சனா 6-2, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் பாட்​ரிக் கைப்​சனை​யும், தரவரிசை​யில் 18-வது இடத்​தில் உள்ள அர்​ஜெண்​டினா வீரர் பிரான்​சிஸ்கோ செருன்​டலோ 6-3, 7-6 (7/0), 6-3 என்ற செட் கணக்​கில் சீன வீரர் ஜாங் ஜிஸ்​ஹெனை​யும் வீழ்த்தினர்.

ஜாஸ்​மின் பவ்​லினி மகளிர் பிரிவு முதல் சுற்று ஆட்​டத்​தில் இத்​தாலி வீராங்​க​னை​யும், போட்​டி​யின் 7-ம் நிலை வீராங்கனை​யு​மான ஜாஸ்​மின் பவ்​லினி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பெல​ராஸ் வீராங்​கனை அலி​யாக்​சான்ட்ரா சாஸ்​னோ​விச்​சைத் தோற்​கடித்​தார். மற்​றொரு ஆட்​டத்​தில் தரவரிசை​யில் 12-ம் இடத்​தில் உள்ள உக்​ரைன் வீராங்கனை எலினா ஸ்விட்​டோலினா 6-4, 6-1 என்ற நேர் செட்​களில் ஸ்பெ​யின் வீராங்​கனை கிறிஸ்​டினா புக்சாவை சாய்த்​தார். துருக்கி வீராங்​கனை ஜெய்​னப் சோன்​மேஸ் 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்​கில் ரஷ்ய வீராங்கனை ஏகாட்​டேரினா அலெக்​சான்ட்​ரோ​வாவை வீழ்த்​தி​னார்.

மற்ற போட்​டிகளில் அமெரிக்க வீராங்​கனை கேட்டி மெக்நாலி 6-3, 6-1என்ற கணக்​கில் ஜப்​பானின் ஹிமனோ சகாட்​சுமேவை​யும், ரஷ்​யா​வின் போலினா குடேர்​மெட்​டோவா 6-2, 6-3 என்ற கணக்​கில் ஸ்பெ​யினின் குய்​மார் மரிஸ்​டானியை​யும் சாய்த்​தனர். ருமேனியா வீராங்​கனை கேப்​ரியலோ ரூஸ் 6-4, 7-5 என்ற செ ட் கணக்​கில் தரவரிசையில் 26-ம் இடத்​தில் உள்ள உக்​ரைன் வீராங்கனை​யான டயானா யஸ்த்​ரேம்​ஸ்​காவை தோற்கடித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *