மெல்பர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலேயே அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார்.
45 வயதாகும் வீனஸ், நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், வைல்டு கார்டு மூலம் விளையாடினார். இந்த ஆட்டத்தில் செர்பியாவின் ஒல்கா டானிலோவிச்சை வீனஸ் எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஒல்கா 6-7, 6-3, 6-4 என்ற கணக்கில் வீனஸை வீழ்த்தினார்.இதனால் முதல் சுற்றோடு ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வீனஸ் வில்லியம்ஸ் வெளியேறியுள்ளார்.