இந்​தி​யா​வுக்கு எதி​ரான 3-வது கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 41 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி!!

இந்​தூர்:
இந்​தி​யா​வுக்கு எதி​ரான 3-வது மற்​றும் கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 41 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

நியூஸிலாந்து வீரர்​கள் டேரில் மிட்​செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். மேலும் ஒரு​நாள் தொடரை​யும் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்​கில் கைப்பற்றியது.

நியூஸிலாந்து அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர், 5 சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கிறது.

வதோத​ரா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​தியா 4 விக்​கெட்​கள் வித்தியாசத்​தி​லும், ராஜ்கோட்​டில் நடை​பெற்ற 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் நியூஸிலாந்து 7 விக்​கெட்​கள் வித்தியாசத்​தி​லும் வெற்றி பெற்​றது. இதையடுத்து ஒரு​நாள் தொடர் 1-1 என்ற கணக்​கில் சமநிலை​யில் இருந்​தது.

இந்​நிலை​யில் இந்​தூரில் உள்ள ஹோல்​கர் மைதானத்​தில் 3-வது ஒரு​நாள் போட்டி நடை​பெற்​றது. இந்​திய அணி​யில் பிரசித் கிருஷ்ணாவுக்​குப் பதிலாக அர்​ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்​டார்.

முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 337 ரன்​கள் குவித்​தது. தொடக்க ஆட்டக்​காரர்​களாக டேவன் கான்​வே, ஹென்றி நிக்​கோல்ஸ் ஆகியோர் களமிறங்​கினர்.

ஹென்றி நிக்​கோல்ஸ் ரன் கணக்​கைத் தொடங்​காமலேயே அர்​ஷ்தீப் சிங் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். மறு​முனை​யில் இருந்த டேவன் கான்​வே, 5 ரன்​கள் எடுத்​திருந்த து, நிலை​யில் ஹர்​ஷித் ராணா பந்​து​வீச்​சில் ரோஹித் சர்​மா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் 3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த வில் யங்​கும், டேரில் மிட்​செல்​லும் நிதான​மாக விளை​யாடி ஸ்கோரை உயர்த்​தினர். வில் யங் 41 பந்துகளில் 30 ரன்​கள் சேர்த்​திருந்த நிலை​யில் ஹர்​ஷித் ராணா பந்​தில், ஜடேஜா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

4-வது விக்​கெட்​டுக்கு இணைந்த டேரில் மிட்​செல்​லும், கிளென் பிலிப்​ஸும் அதிரடி​யாக விளை​யாடி ஸ்கோரை வெகு​வாக உயர்த்​தினர்.

இரு​வரும் அரை சதம் கடந்த நிலை​யில் அபார​மாக விளை​யாடி ரன்​களைக் குவித்​தனர். இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் பந்​து​வீச்சாளர்களை மாற்​றிப் பார்த்​தும் பலன் கிடைக்கவில்லை.

தொடர்ந்து அபார​மாக விளை​யாடிய டேரில் மிட்​செல் இந்தத் தொடரில் தனது 2-வது சதத்தை விளாசி​னார்.

அவரைத் தொடர்ந்து கிளென் பிலிப்​ஸும் சதம் விளாசினார். 88 பந்​துகளில் 106 ரன்​கள் (9 பவுண்​டரி, 3 சிக்ஸர்) எடுத்த நிலை​யில், அர்​ஷ்தீப் சிங் பந்​து​வீச்​சில் கே.எல்​.​ராகுலிடம் கேட்ச் கொடுத்து பிலிப்ஸ் ஆட்டமிழந்தார்.

4-வது விக்​கெட்​டுக்கு பிலிப்​ஸ்​-மிட்​செல் ஜோடி 219 ரன்​கள் சேர்த்​தது குறிப்​பிடத்​தக்​கது.இதன் பின்​னர் வந்த மிட்​செல் ஹே 2, ஜகாரி பவுல்க்ஸ் 10, கிறிஸ்​டியன் கிளார்க் 11 ரன்​கள் சேர்த்​தனர்.

அதிரடி​யாக விளை​யாடிய டேரில் மிட்​செல் 131 பந்​துகளில் 137 ரன்​கள் (15 பவுண்​டரி, 3 சிக்​ஸர்) குவித்து 45-வது ஓவரில் ஆட்​ட​மிழந்​தார்.கேப்​டன் மைக்​கேல் பிரேஸ்​வெல் 28, கைல் ஜேமிசன் 0 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

இந்​திய அணி தரப்​பில் அர்​ஷ்தீப் சிங், ஹர்​ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்​கெட்​களைக் கைப்பற்றினர். முகமது சிராஜ், குல்​தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைச் சாய்த்​தனர்.

பின்​னர் 338 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் இந்​திய அணி விளை​யாடத் தொடங்​கியது. தொடக்க ஆட்டக்​காரர்​களாக ரோஹித் சர்​மா​வும், கேப்​டன் ஷுப்மன் கில்​லும் களம்​பு​குந்​தனர்.

அதிரடி​யாக விளையாட முயன்ற ரோஹித் சர்மா 11 ரன்​கள் எடுத்திருந்த​போது ஜகாரி பவுல்க்ஸ் பந்​து​வீச்​சில் கிறிஸ்டியன் கிளார்க்​கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்​டன் ஷுப்​மன் கில் 18 பந்​துகளில் 23 ரன்​கள் (4 பவுண்​டரி​கள்) எடுத்​திருந்​போது, கைல் ஜேமிஸன் வீசிய பந்​தில் போல்​டா​னார்.

இதைத் தொடர்ந்து விளை​யாட வந்த ஸ்ரேயஸ் ஐயர் 3 ரன்களும், கே.எல்​.​ராகுல் ஒரு ரன்​னும் எடுத்து பெவிலியன் வந்​தனர். 5-வது விக்​கெட்​டுக்கு விராட் கோலி​யுடன் ஜோடி சேர்ந்த நிதிஷ்கு​மார் ரெட்டி 53 ரன்​கள் எடுத்து அவுட்டானார்.

ரவீந்​திர ஜடேஜா 12 ரன்​களில் வீழ்ந்​தார். 7-வது விக்​கெட்​டுக்கு கோலி​யுடன் இணைந்த ஹர்​ஷித் ராணா அதிரடி​யாக விளை​யாடி 41 பந்​துகளில் 52 ரன்​கள் சேர்த்து அவுட்​டா​னார். இதனிடையே விராட் கோலி ஒரு​நாள் போட்​டிகளில் தனது 54- வது சதத்தை விளாசி​னார்.

ஹர்​ஷித் ராணா-​வி​ராட் கோலி ஜோடி களத்​தில் இருந்​த​போது இந்​திய அணி வெற்றி பெறும் என்ற நம்​பிக்கை இருந்​தது.

ராணா ஆட்​ட​மிழந்​ததும், கோலி​யும் வீழ்ந்​தார். அவர் 108 பந்​துகளில் 124 ரன்​கள் சேர்த்​தார். கோலி வீழ்ந்ததும் இந்​திய அணி​யின் தோல்வி உறு​தி​யானது.

முகமது சிராஜ் 0, குல்​தீப் யாதவ் 5 ரன்​கள் எடுத்​தனர். அர்ஷ்தீப்​சிங் 4 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். 46 ஓவர்​களில் 296 ரன்​களில் இந்​திய அணி​யின் இன்​னிங்ஸ் முடிவுக்கு வந்​தது.

இதையடுத்து நியூஸிலாந்து 41 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று ஒரு​நாள் தொடரை​யும் 2-1 என்ற கணக்​கில் கைப்​பற்​றியது.நியூஸிலாந்து அணித்​தரப்​பில் ஜகாரி பவுல்க்​ஸ், கிறிஸ்​டியன் கிளார்க் ஆகியோர் தலா 3, ஜெய்​டன்​ லென்​னாக்​ஸ்​ 2, கைல்​ ஜேமிசன்​ ஒரு ​விக்​கெட்​டை வீழ்​த்​தினர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *